சுவையான மாங்காயில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது நோய் எதிர்ப்பு சக்தியையும், செரிமானத்தையும் மேம்படுத்த உதவலாம் பச்சை மாம்பழம் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கலாம் இந்த மாங்காயை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.. வெள்ளரி, வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், வறுத்த சீரகப் பொடியுடன் மாங்காய் சேர்த்து சாலடாக சாப்பிடலாம் மாங்காய், கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை, சாதம் சேர்த்து மாங்காய் சாதமாக உண்ணலாம் மாங்காய் துண்டுகளுடன் தயிர், தேன், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்து ஸ்மூத்தியாக குடிக்கலாம் உப்பு, சீரகம், சிவப்பு மிளகாயுடன் மாங்காய் சேர்த்து அரைத்து சட்னியாகவும் சாப்பிடலாம்