காலையில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் செய்ய வேண்டியவை! குழந்தைகளின் நாளை சரியாக தொடங்கி வைப்பது பெற்றோர்களின் கடமை காலையில் குழந்தைகளை எழுப்பும் போது, பெற்றோர்களின் முகத்தில் புன்னகை இருக்க வேண்டும் காலையில் அவர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிடலாம் பல் துலக்க உதவலாம், உணவு சமைக்கும் இடத்தில் அவர்களை உட்கார வைக்கலாம் அவர்களுக்கு என்ன கனவு வருகிறது என்று கேட்டு, ஆழ்மனதில் இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் அவர்களின் கற்பனை திறனை வளர்க்க உதவ வேண்டும் குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்கள், சின்னதாக இருந்தாலும் பாராட்டுங்கள் நீங்கள் உங்கள் குழந்தையின் மீது வைத்திருக்கும் அன்பை, வார்த்தைகள் மூலம் தெரிவிக்க வேண்டும் காலையில் எழுந்தவுடன் வேகவேகமாக கிளம்பாமல், நிதானமாக கிளம்பலாம்