வளரும் குழந்தைகளை சாதனையாளராக்குவது எப்படி? ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு நம் குழந்தைகளிடம் இருக்கும் தனித்திறமையை நாம் அறிந்து கொள்வது மிக முக்கியம் கணவன், மனைவி இருவருமே வெளியே வேலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாக உள்ளது இருப்பினும் குழந்தைகளுக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வேண்டும் குழந்தைகள் பெரும்பகுதி நேரத்தை தங்கள் பள்ளி ஆசிரியர்களுடன்தான் செலவிடுகிறார்கள் பெற்றோருக்கும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல உறவு வேண்டும் கல்வியை மட்டும் குழந்தைகளிடம் திணித்தால் அவர்களிடம் இருக்கும் தனித்திறமைகளை அடையாளம் காண முடியாது சுதந்திரமாக அவர்களுக்குப் பிடித்த துறைகளில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள் சாதனையாளர்களை உருவாக்க விரும்பும் பெற்றோர்களுக்குத் தியாகமும், பொறுமையும் தேவை