ஏரியல் யோகா என்றால் என்ன? நன்மைகள் என்ன?

Published by: ஜான்சி ராணி

ஆரோக்கியமான வாழ்வதற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை கலந்து வடிவமைக்கப்பட்டதுதான் ஏரியல் யோகா. இது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் கிறிஸ்டோபர் ஹாரின்சன் என்பவரால் 1991-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏரியல் யோகாவில் துணியில் தூளி (தொட் டில்) கட்டி அதில் படுத்தவாறும், தொங்கியவாறும் யோகா பயிற்சிகளை செய்கிறார்கள்.

உடலும், மனமும் புத்துணர்ச்சி அடை யும். ஏரியல் யோகாவை, 'எக்ஸ்பிரஸ் யோகா ' என்றும் அழைப்பார்கள். பாரம்பரிய யோகா பயிற்சியை 45 நிமிடங்கள் செய்தால் கிடைக்கக்கூடிய பலனை, இதை 15 நிமிடங்கள் செய்தாலே பெற்று விடலாம்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படு பவர்கள், ஹார்மோன் பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த பயிற்சி சிறந்தது. ஏரியல் யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும், இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்கள் ஏரியல் யோகா செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஏரியல் யோகா பயிற்சி செய்வதால் உடல் வலி குறையும். செரிமானம் சீராகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சருமம் பொலிவாகும். மன அழுத்தம் குறையும். ஹார் மோன் சுரப்பு சமநிலை அடையும். நினைவாற்றல் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.