’வானம் பார்த்தல்' மன அழுத்தம் குறைய உதவுமா?
வானம், மேகங்கள் பார்ப்பது மனதுக்கு அமைதி அளிக்கும் என்பார்கள் நிறத்தின் அடிப்படையில் மூளையில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணம்.
புதிய தளிர்களைப் பார்ப்பது, மரங்கல், பசுமையான தோட்டம், நீர்வீழ்ச்சி ஆகியவை மனத்திற்கு இதம் அளிக்கும்.
இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைக் கண்டு ரசிப்பவர்கள் பலர் உண்டு. போலவே, பகலில் மேகங்கள் நிறைந்த வானத்தை பார்ப்பதும் மனம் நிறைய உதவும்,
ஒவ்வொரு முறை நிமிர்ந்து வானத்தைப் பார்க்கும்போதும் பிரம்மிப்பை தூண்டுவது போன்ற உணர்வும், மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இரவு நேரத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்ப்பது, பிரபஞ்சத்தின் பரந்த தன்மையைப் பற்றி சிந்திக்க வைக்கும்.
இது உங்களின் பிரச்சனைகளை மறக்க காரணமாக இருக்கும்.
பிரச்சினைகளை முன்னோக்கி கொண்டு சென்று அவற்றுக்கான தீர்வைக் கண்டறிவதற்கு உதவும். மனம் நிம்மதி அடைந்த உணர்வை கொடுக்கும்.
நட்சத்திரங்கள் இல்லாத வானத்தைப் பார்க்கும்போது இயல்பாக்வே உங்களுடைய சுவாச செயல்பாடு மெதுவாக நடக்கும். இதன்மூலம் உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களைக்கூட உங்களால் உணர முடியும்.
வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப சாதனங்களில் மூழ்கி இருப்பது போன்ற வற்றால் நம்மில் பலரும் இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். அடிக்கடி வானத் தைப் பார்ப்பது நம்மைச் சுற்றியுள்ளவற்றை மறந்து, இயற்கையோடு மீண்டும் இணைவதற்கு வழிவகுக்கும்.