சமையலுக்கு நறுக்கும் வெங்காயத்தில் கருப்புப் புள்ளிகளா? ஜாக்கிரதை!

Published by: விஜய் ராஜேந்திரன்

வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வெங்காயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது

வெங்காயத்தில் இருக்கும் சின்னச் சின்ன குறைகள் நம் ஆரோக்கியத்திற்கே வேட்டுவைத்து விடலாம்

வெங்காயத்தை உரித்து நறுக்கும்போது அதன் உட்புறத்தின் சில பகுதிகளில் கரும்புள்ளிகள் இருப்பதை சில சமயம் நீங்கள் பார்த்திருக்கலாம்

சிலர் அதை வெட்டி அகற்றி விடுவார்கள். சிலரோ, அதை தண்ணீரில் நன்கு கழுவி விட்டு சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்

வெங்காயத்தை சுற்றி அப்படி கருப்பாக இருப்பது ஒருவகை பூஞ்சை ஆகும்

கருப்பு பூஞ்சை உள்ள பகுதியை முழுவதுமாக அகற்றிவிட்டு வெங்காயத்தை பயன்படுத்தினால் எந்த ஆபத்தும் இல்லை

அலர்ஜி ஏற்படும் நபர்களுக்கு இந்த வகை வெங்காயத்தை சாப்பிடுவது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம்

ஓரிரு வெங்காயம் இதுபோன்று கரும்புள்ளிகள் கொஞ்சம் அழுகலுடன் இருந்தால் உடனே நீக்கிவிடுவது நல்லது

இனிமேல் நறுக்கும் பொழுது கருப்பு கலரில் இருந்தால் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசி விடுங்கள்