சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓட்ஸ், தயிர் ஃபேஸ் பேக்!
ஓட்ஸில் உள்ள சபோனின் எனும் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
இது சருமத்தை மென்மையாகவும்,ஈரப்பதத்துடன் இருக்க உதவுவதோடு சரும வடற்சியையும் தவிர்க்கும்.
ஓட்ஸில் உள்ள ஆன்டி - ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு கள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
ஓட்ஸுடன் தயிர், வாழைப்பழம், பால்,தேன், எலுமிச்சம் பழச்சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து பேஸ் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.
ஓட்ஸ்,தயிர், 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், தேன் சேர்த்து பசை போல தயாரிக்கவும். இதை முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.
ஓட்ஸ், பால், தேன் கலந்து பேஸ்டாக மாற்றவும். அதை முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
ஓட்ஸில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து நன்றாகக் கலக்கவும். இந்த பேஸ்பேக்கை முகம்,கை மற்றும் கழுத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
ஓட்ஸ், கடலை மாவு, தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். 'வைட்டமின் சி' முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அழிக்கும்.