தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
தினமும் உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, சரிவிகித உணவு என வாழ்க்கை முறை இருந்தாலே ஆரோக்கியமான உடல்நிலை இருக்கும்
தினமும் உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றனர்
ஒரு நாளில் போதுமான அளவு தூங்கினாலும் சோர்வாகவோ, உடலில் எனர்ஜி இல்லை என்றோ உணர்ந்தால் அவசியம் சிறிதளவிலான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நடைப்பயிற்சி, யோகா என குறைந்தது 30 நிமிடங்களாவது செய்ய வேண்டும். வாரத்திற்கு 5 நாட்களாகவது உடற்பயிற்சி செய்ய மறந்துடாதீங்க
ரொம்ப காலமாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலில் ஃப்ளக்ஸிபிளிட்டி இருக்காது.
உடல்நலம் சரியில்லை என்றால் மனநலன் பாதிக்கபடும் . மனசோர்வு, மன அழுத்தம், எரிச்சலுணர்வு உள்ளிட்டவைகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.
சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி உடல் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பாக இருக்கவும் மிகவும் அவசியமானதாகும். தினமும் வாக்கிங், ஜாகிங் செய்வதை பழக்கமாக்கவும். இது மனநலனையும் மேம்படுத்தும்.
அன்றாட வேலைகளை செய்ய ஆற்றல் இல்லாத உணர்வு மேலெழும். உடற்பயிற்சி செய்தால் இவற்றை தடுக்கலாம்.
தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்தவும். வாரம் முழுவதும் செய்ய முடியவில்லை என்றாலும் 5 அல்லது 2 நாட்கள் என தொடங்குங்கள்.