குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவிப்பது எப்படி?
குழந்தைகளின் சின்ன சின்ன செயல்களை பாராட்டுகள். குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாதீர். ஆரோக்கியமான முறையில் பிழைகளை சொல்வது நல்லது.
வெற்றியோ தோல்வியோ பிடித்தவற்றை முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதை ஊக்குவிக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டால் அடுத்தமுறை சிறப்பாக செயல்படலாம் என்று பாரட்டுங்கள்.
குழந்தைகளுக்கு எந்த பாடம் பிடிக்கிறது, எதில் ஆர்வம் அதிகம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகள் ஏதாவது வேலை செய்து முடித்ததும் பாராட்டுகள். அவரின் பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றியும் பொறுப்புணர்வும் பற்றியும் பேசி புரியவைக்க வேண்டும். பாராட்டுவது நல்லது.
குழந்தைகளுக்கு விளையாட்டு, படம் வரைதல் என எதன்மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் உள்ளது என்பதை தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதற்கேற்றவாறு அவர்களுக்கு
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை கொடுக்க வேண்டும். சாப்பிட அடம்பிடித்தாலும் அவர்களுக்கு ஏற்றார்போல சாப்பிட வைக்க வேண்டும்.
எப்போதும் ஸ்க்ரீன் இருந்தால் அது அவர்களுக்கு பாதுகாப்பானது இல்லை. அதனால் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்கனவே அறிவு இருக்கும். அவற்றை கவனித்து ஊக்குவிப்பது மிகவும் நல்லது.
குழந்தைகளின் புதிய முயற்சிகளை பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் மிகவும் அவசியமானதாகும்.