abp live

வீட்ல செல்லப்பிராணி இருக்கா? கோடை கால பராமரிப்பு டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

மனிதர்களை போல மற்ற உயிர்களுக்கும் பிரத்யேக கவனிப்பு தேவைப்படும்.

abp live

செல்ல பிராணிகள் குடிப்பதற்கு சுத்தமான தண்ணீரை வைக்கவும் . இது அவற்றை ஹைட்ரேட்டாக இருக்கம் உதவும். தண்ணீர் வைக்கும் கிண்ணத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

abp live

சூரிய ஒளி நேரடியாக படாத இடங்களில் அவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நிழலாக இருக்கும் இடம் செல்லப்பிராணிகளை எப்போதும் வசதியாக வைத்திருக்கும்.

abp live

நாய்குட்டிகளின் மூளை, எலும்புகள் வலுவாக வளர்ச்சி அடைய அதிகமாக புரோட்டீன், ஒமேகா 3 & 6 நிறைந்த உணவுகள் மற்றும் மீன் எண்ணெய் அவசியமானது. வளரும் நாய்குட்டிகளுக்கு 22% முதல் 32% வரை புரோட்டீன் தினசரி உணவில் தேவைப்படுகிறது.

abp live

கோடைக்காலத்தில் செல்லப்பிராணியை வெளியே அழைத்துச் செல்லும் நேரத்தைக் குறைக்கவும். மாலையில் வெயில் குறைந்த பிறகு நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லலாம்.

abp live

தடிமனான மற்றும் நீண்ட ரோமங்கள் இருந்தால் செல்லப்பிராணிகளுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படலாம். நீண்ட முடி இருப்பது கோடையில் வெப்பத்தையும், எரிச்சலையும் அளிக்கும். அதனால் நீண்ட முடிகளை தேவையான அளவு வெட்டுதல் அவசியம்.

abp live

சில அறிகுறிகளை வைத்து செல்லப்பிராணியின் உடல் வெப்பநிலையை தெரிந்து கொள்ளலாம். அதிகமாக மூச்சிரைத்தல், சோர்வாக இருப்பது, உடல் சூடாக இருப்பதை குறிக்கும். அவ்வாறு இருந்தால் உடனடியாக குடிப்பதற்கு நீர் கொடுக்கவும்.

abp live

தினமும் நாம் குளிப்பது போலவே, செல்லப்பிராணிகளையும் குளிக்க வைப்பது அவசியம். உடலின் வெப்பநிலையை குறைக்கலாம்.

abp live

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் நாய்களுக்கு கொடுக்கலாம். தோலை நீக்கிவிட்டு கொடுப்பது நல்லது. மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்தும் நிரம்பிய உணவு