உதடுகளை பராமரிப்பது எப்படி?இதோ டிப்ஸ்! கிளிசரின் - இதை பஞ்சில் நனைத்து உதடுகளில் தடவினால் ஈரப்பதத்துடன் இருக்க உதவும்,. வாழைப்பழ மாஸ்க். வாழப்பழத்தின் உள் பகுதியுடன் தயிர், தேன் சேர்த்து நன்றாக கலந்து மாஸ்க் போட்டால் உதடு ஆரோக்கியமாக இருக்கும். உதடு பகுதியில் உள்ள கருமையை நீக்க கன்சீலர் பயன்படுத்தலாம். எலுமிச்சைச் சாறு- இது சிறந்த பிளீச்சிங் ஏஜெண்டாக பயன்படுகிறது. மஞ்சள் - மஞ்சளை பாலில் கலந்து உதடு பகுதியை சுற்றி தடவினால் உதட்டின் கருமை படிப்படியாக குறையும். பன்னீர், ரோஸ் பவுடர் உடன் பால் சேர்த்து தடவி வர உதடு ஆரோக்கியமாக இருக்கும். பாதாம் எண்ணெய்,விளக்கெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உதடுகளை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.