அதிகாலை எழுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? அதிகாலையில் எழுந்திருப்பதில் உள்ள நன்மைகள் பற்றி காணலாம். காலை 5 மணிக்குள் எழுந்திருப்பது உங்களுக்கு அன்றைய நாளில் அதிக நேரம் இருப்பதாக தோன்றலாம். காலை உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாக சாப்பிட முடியும். பொறுமையாக தயார் செய்ய நேரம் இருக்கும். அதோடு, காலை உணவை சாப்பிடவும் நேரம் இருக்கும். பரபரவென இருக்கவேண்டிய அவசியம் இருக்காது. சூரியன் உதிப்பது, காலையில் இருக்கும் அமைதி உள்ளிட்டவற்றை எஞ்சாய் செய்யலாம். அதிகாலை எழுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? அதிகாலையில் எழுந்திருப்பதால் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். குட்டி வாக் போயிட்டு வராலாம். சுறுசுறுப்பான உணர்வீர்கள். அதிகாலையில் எழுவதால் சூரிய ஒளி கிடைக்கும். சன் - பாத் எடுக்கலாம்.வைட்டமின் டி கிடைக்கும். மனநிலை அமைதியாக இருக்கும். மன நிறைவுடன் ஒரு நாளில் செயல்பட முடியும்.இயற்கையாகவே சர்கார்டியன் ரிதம் சீராக இருக்கும்.