நாய் பூனை வளர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு இவற்றிற்கு முடிகள் கொட்டும், அவை வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தாக மாறலாம் டேபிள், நாற்காலி, படுக்கை விரிப்பு, தரை விரிப்பு ஆகியவற்றை வேக்கம் கிளீனர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் பெரும்பாலும் சமயலறைக்குள் உங்கள் செல்லப்பிராணியை நுழைய விடாமல் இருப்பது சிறந்தது உணவு உண்ணும்போது உங்கள் செல்லப்பிராணி அருகில் இருந்தால் அவற்றிற்கும் ஊட்டி விடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது அப்படி செய்வது ஆரோக்கியமானது அல்ல. பொதுவாகவே ஊட்டிவிடுவது உங்களது செல்லப்பிராணிக்கும் நல்லதல்ல முறையாக செல்லபிராணிகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை செலுத்தி விட வேண்டும் வீடுகளை சுத்தப்படுத்துவதை போல் செல்லப்பிராணிகளையும் முறையாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளிப்பாட்ட வேண்டும் இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காகவே விதிமுறைகள் பல உள்ளன செல்லப்பிராணிக்கு முறையான உரிமம் வாங்க வேண்டும், இல்லையெனில் அவை வெளியே சுற்றினால் அரசே கூட பிடித்து செல்லலாம்