சமையல் அறை பொருட்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

Published by: விஜய் ராஜேந்திரன்

சமையலில் சிறந்து விளங்கும் பெண்கள் தங்களது சமையல் அறையை மிக சிறப்பாக வைத்திருப்பார்கள்

மசாலாக்களை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும்

நேரடி வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து காக்க, காற்று புகாத டப்பாக்களில் மசாலாக்களை சேகரித்து வைக்கவும்

சமையலறையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க மிகவும் பேருதவியாக இருப்பது கரித்துணி

அந்த துணிகளை வெதுவெதுப்பான நீரில் தினமும் கழுவிப் பயன்படுத்த வேண்டும்

சமையலுக்கு நான் ஸ்டிக் பான்களைப் பயன்படுத்தும் போது அவற்றின் பூச்சு தேய்ந்துவிட்டால் அதை பயன்படுத்தக்கூடாது

நான் ஸ்டிக் பான்களை ஒவ்வொரு 2-3 ஆண்டுகளுக்கு அல்லது பூச்சு தேய தொடங்கியவுடன் மாற்ற வேண்டும்

காய்கறிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மரபலகைகளில் விரிசல் இருந்தால் உடனே மாற்ற வேண்டும்

பிளாஸ்டிக் உணவுப் பாத்திரங்களில் விரிசல், நிறமாற்றம் அல்லது துர்நாற்றம் இருப்பதைக் கண்டால், அப்புறப்படுத்த வேண்டும்