இளநீரின் உள் தண்ணீர் எப்படி வருகிறது? இயற்கை நமக்கு அளித்துள்ள ஓர் அருமையான இயற்கை பானம் என்றால், அது இளநீர்தான் இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், இது நீரிழப்பை தடுப்பதோடு, சோர்வாக இருப்பவர்களுக்கு ஆற்றலையும் தருகிறது உடனடியாக உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இளநீரில் வைட்டமின் பி2 (ரைபோஃப்ளேவின்), பி3 ஃபோலிக் அமிலம், பயோட்டின், பொட்டாசியம், சோடியம் ஆகியவை உள்ளன இவ்வளவு சத்துகள் உள்ள இளநீர், தேங்காய்க்குள் எப்படி செல்கிறது என்று யோசித்திருக்கிறீர்களா? தென்னை மரம் தன் செல்கள் மூலம் வேர்களில் இருந்து தண்ணீரை எடுத்து, இந்த பகுதிக்கு கொண்டுவருகிறது வேர்களால் உறிஞ்சப்படும் நீர், செல்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, காய்களில் நீர் கூறுகளை உருவாக்குகிறது தேங்காய் முதிர்ச்சியடையும்போது, தண்ணீர் வற்றத் தொடங்குகிறது இதன் காரணமாக, முற்றிய தேங்காயில் தண்ணீர் பெரும்பாலும் இருப்பதில்லை