முடியை வலுவாக்கும் வெங்காய ஷாம்பு.. வீட்டிலே செய்யலாம்! வெங்காய ஷாம்பு நீண்ட காலமாக முடி பராமரிப்புக்கான ஒரு ரகசிய ஆயுதமாக இருக்கிறது வெங்காயத்தில் உள்ள கந்தக உள்ளடக்கம் ஆரோக்கியமான, வலுவான மற்றும் பளபளப்பான முடியைப் பெற உதவும் ஹீட் ஸ்டைலிங் டூல்ஸால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது அத்துடன் இதில் சல்பர், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது வெங்காயத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும் பேஸ்ட்டை வடிகட்டி நீங்கள் சுமார் 1/4 கப் வெங்காய சாறு பெற வேண்டும் ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி மைல்டு ஷாம்பூவைச் சேர்த்து நன்கு கலக்கவும் வெங்காயத்தின் வாசனையை மறைக்க லாவெண்டர், ரோஸ்மேரி அல்லது தேயிலை மர எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களை சேர்க்கலாம் ஒரு புனலைப் பயன்படுத்தி, கலவையை சுத்தமான, வெற்று ஷாம்பு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்தலாம்