அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்



அதில் தலா 4 தக்காளி, வெங்காயம் , 7 பல் பூண்டு, 10 வர மிளகாய் சேர்க்கவும்



ஒரு துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி புதினா, ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்க்கவும்



தேங்காய் இரண்டு துண்டு, சேர்த்து வதக்கவும், தேங்காயை கடைசியாக சேர்க்கலாம்



இவை வதங்கியதும் ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்



இப்போது கடுகு கறிவேப்பிலை தாளித்து இந்த சட்னியில் சேர்த்து கலந்து விடவும்



இந்த சட்னி இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும்