தைப்பொங்கல் பூஜை செய்வது எப்படி?

Published by: ஜான்சி ராணி

ராகு காலம், நல்ல நேரம் இல்லாத நேரத்தில் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது.

வாழை இலையில் இனிப்பு பொங்கல், பால் பொங்கல், பாயசம், வடை, கரும்பு, பழங்கள் என வைத்து நல்ல நேரத்திற்குள் பூஜை செய்து முடித்துவிட்ட வேண்டும்.

உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும். 

பொங்கல் தினத்தில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ...பொங்கல்..’ என்று சொல்லி கொண்டே பொங்கல் வைப்பது சிறந்தது.

காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இது உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

பொங்கல் பூஜையில் வைப்பதற்கு கல் உப்பு, துவரம் பருப்பு, வெல்லம் உள்ளிட்டவற்றை வாங்கி வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வமும் வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.


மண் பானை பயன்படுத்தினால் புதிதாக மண் பானை வாங்கி அதை பயன்படுத்துபடி தயார் நிலையில் வைக்கலாம்.