நள்ளிரவில் உணவு சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்பதை பார்க்கலாம்

Published by: தனுஷ்யா

முன்பெல்லாம் பகலில் வேலை பார்த்துவிட்டு பகலில் மட்டும் சாப்பிட்டு இரவில் தூங்கிவிடுவோம்

இப்போது இரவில் தனி உலகமே இயங்கி வருகிறது. நைட் ஷிஃப்ட் வேலை பார்பவர்களை தாண்டி பலரும் இரவில் விழித்து கொண்டு இருக்கிறார்கள்

இரவு 9- 10 மணிக்குள் தூங்கிவிடும் காலம் சென்று இரவு 12.. ஏன் அதிகாலை 3 மணி வரை விழித்து இருக்கிறார்கள்

தூங்காமல் விடிய விடிய சீரிஸ் பார்க்க தொடங்கிய மக்களுக்கு இன்று நினைத்தாலும் தூக்கமே வருவது இல்லை

இதுபோக சிலர் இரவில் ஊரை வலம் வருவதுடன் இரவில் கிடைக்கும் உணவுகளை ருசித்து வருகிறார்கள்

நள்ளிரவில், அதிகாலையில் உணவு உண்பது தவறான பழக்கம் ஆகும். இப்படி செய்தால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் வரும்

இதையே தொடர்ந்து செய்து வந்தால் ஒவ்வொரு பிரச்சினை வரத்தொடங்கும். அப்போது, இரவில் ஒரு நாள் கூட ஆசைக்காக சாப்பிட கூடாதா? என்ற கேள்வி எழும்பும்

வருடத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ எப்போதாவது அனுபவத்திற்காக செய்தால் பரவாயில்லை. தொடர்ந்து செய்து வந்தால்தான் பிரச்சினை

இரவில் உணவை உட்கொண்டால், அடுத்த நாள் லேசான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டாம்!!