சோறு சாப்பிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

Published by: பிரியதர்ஷினி

அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன

அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் உடலுக்கு இது உடனடி ஆற்றலை தரும்

அரிசி உணவை கைவிடுவதால் அரிசியின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின் பி மற்றும் சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம்

அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைக்க உதவலாம்

அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்புகள் உள்ளன

எனவே அவற்றை முற்றிலுமாக உணவு பட்டியலில் இருந்து நீக்குவது நல்லதல்ல

மூன்று வேளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு ஒரு வேளை மட்டும் அளவாக சாப்பிடலாம்

புரதம், கொழுப்புச்சத்து , இரும்புச்சத்து உள்ளிட்ட மற்ற சத்துக்கள் கொண்ட உணவுகளை கட்டாயம் டயட்டில் சேர்க்க மறக்க வேண்டாம்