இன்றைய பெண்களின் விருப்பமான ஆடைகளில் ஒன்றாக இருப்பது லெக்கின்ஸ்தான்
உடலோடு ஒட்டி இருக்கும் இந்த உடை பெண்களுக்கு மிகவும் பிடித்து இருப்பதற்கான காரணமே, அதன் மெல்லிய பண்பும், கனமாக இல்லாமல் இருப்பதும்தான்
லெக்கின்ஸ் முறையின்றி அணிவதால் பல்வேறு சரும நோய்களும், பூஞ்சை மற்றும் பாக்டீரியாத் தொற்றுகளும் ஏற்படுகின்றன
லெக்கின்ஸ் இறுக்கமான ஆடைகளை முறையின்றி அணியும்போது, சருமத்தில் உராய்வை ஏற்படுத்தி, ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் வெளிப்புற அடுக்கில் விரிசல் அல்லது புண்கள் ஏற்படலாம்
இறுக்கமான உடைகளை அணிவதன் மூலம் நீங்கள் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுக்கு ஆளாவீர்கள். சருமத்தில் சிவப்பு படைகள் போன்று தோன்றும்
முறையின்றி லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிவதன் மூலம், உடலின் சூடு வெளியேறாமல், உடலிலேயே தங்கி விடுகிறது
ஈஸ்ட் சூடான அல்லது ஈரமான சூழலில் வளர்கிறது. நீங்கள் முறையின்றி லெக்கின்ஸ் அணிந்தால் ஈஸ்ட் வளர நல்ல சூழ்நிலையை உருவாக்கி தருகிறது
லெக்கின்ஸ் போன்ற இறுக்கமாக உடைகள் உங்களின் உடல் ஈரப்பதத்தை குறைத்து விடும். இது உடல் அரிப்பு ஏற்படுவதற்கு காரணமாவதுடன், லெக்கின்ஸில் இருக்கும் தூசிகள் உங்களது தோலை வறட்சியடையச் செய்யலாம்
லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அனைத்தும், தசைகளை சோம்பேறிகளாக மாற்றி விடும். உங்களின் உடல் காலப்போக்கில், மென்மையாகவோ அல்லது உறுதியாகவோ இருக்காது