பெற்றோர்களாக குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது இவைதான்!

Published by: விஜய் ராஜேந்திரன்

குழந்தைகள் சந்தோஷம்

குழந்தைகள் எப்போதுமே வீட்டிலும் உலா வரக்கூடிய சந்தோஷம். என்னதான் அவர்கள் சேட்டைகள் செய்தாலும், அடம்பிடித்தாலும் அந்த நேரத்தில் மட்டும் தான் சலிப்பும்,கோபமும் வரும்

குழந்தைகளின் தனித்துவம்

நம்முடைய குழந்தைகள் கொஞ்சம் புன்னகை செய்தால் போதும். வந்த கோபம் கூட அப்படியே ஒடிவிடும். இந்த செயல்கள் தான் குழந்தைகளின் தனித்துவம்

பெற்றோர்களின் கடமை

குழந்தைகளைப் பொறுப்புடனும், நல்ல பண்புகளுடன் வளர்ப்பது என்பது பெற்றோர்களின் கடமைகளில் ஒன்று

சிறிய தண்டனை

குழந்தைகள் என்றாலே சேட்டைகளும்,தெரியாமல் செய்யக்கூடிய தவறுகளும் சகஜம்தான். அதற்கு அவர்களுக்கு சிறிய தண்டனை கொடுக்கலாம்

சொல்லிக் கொடுக்க வேண்டும்

ஏன் இதை செய்யக்கூடாது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். இதை விட்டு விட்டு டார்ச்சர் செய்தால் அவர்களின் மனநிலை மிகவும் பாதிக்கப்படலாம்

குழந்தைகளுக்கு டாஸ்க்

குழந்தைகளுக்கு 7 அல்லது 8 வயதாகிவிட்டால் அவர்களுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் செய்ய சொல்லிக் கொடுக்கவும். முடியவில்லையென்றாலும் எப்படியாவது முடிக்கும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்

குழந்தைகளிடம் பிரியம்

குழந்தைகளிடம் எந்தளவிற்கு பிரியம் காட்டுகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிய வைக்க வேண்டும்

பாசத்தினால் செய்ய வேண்டும்

எது நல்லது? எது கெட்டது? என்று குழந்தைகளுக்கு பாசத்தின் வாயிலாக கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்

சொல்வதை , நினைத்ததை மட்டும் செய்ய வேண்டும்

சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் நினைத்ததை மட்டும் செய்ய வேண்டும் என்பதை சொல்லாதீர்கள். இப்படி தொடர்ச்சியாக சொல்லும்போது பெற்றோர்களுக்குத் தெரியாமல் பிடித்த விஷயங்களைத் தெரியாமல் செய்ய முயற்சிப்பார்கள்