இதய ஆரோக்கியம் மேம்பட உதவும் முலாம்பழம்!



முலாம்பழம்.. இது ஒரு பழமையான பழம். ஆங்கிலத்தில் இதனை சன் மெலன் என்று அழைக்கின்றனர். இந்தியில் இது சர்தா என்று அழைக்கப்படுகிறது.



பழமாக அப்படியேவும் இல்லை சாலட், ஸ்மூத்தி, ப்யூரி, ஐஸ் க்ரீமி, யோகர்ட், ஃப்ரோஸன் டெஸர்ட்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இது அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் கொண்டதாகும்.



இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.பபுள் கம், பியர்ஸ் போன்று வாசனை கொண்டிருந்தாலும் கூட வெள்ளரி மற்ற மெலன் வகைகள் போல் ருசி கொண்டிருக்கும்.



வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீஸியம், கார்டனாய்ட்ஸ், அத்துடன் இதில் ஆன்ட்டி இன்ஃபளமேட்டரி குணநலன்கள் அதிகமாக உள்ளது. குகுர்மிடாசின் பி, குகுர்பிடாசின் இ ஆகியன உள்ளன.



இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 2 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன. .



இந்த பழம் கொழுப்பைக் குறைக்க நமக்கு உதவுகிறது



முலாம்பழத்தில் உள்ள அடினோசைன் மற்றும் பொட்டாசியம் இதயத்தை பாதுகாக்கும். பொட்டாசியம் உடலுக்கு சோடியத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.