ஏலக்காய், பிரபலமான சமையலறை மசாலாவாக உள்ளது. இதில் எடை இழப்பு மற்றும் கொழுப்பை எரிக்கும் பண்புகள் அதிகம்
ஏலக்காய் செரிமானத்தை மேம்படுத்தி, தேவையற்ற பசி, வீக்கம் ஆகியவற்றையும் குறைக்க உதவும்
ஏலக்காய் தேநீர் நறுமணமிக்க பானம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
ஏலக்காய் மற்றும் எலுமிச்சை தண்ணீர் தொப்பையை குறைக்க ஒரு சிறந்த கலவையாக உள்ளது. நச்சுகளை வெளியேற்றி வீக்கத்தை எதிர்க்க உதவுகிறது
தேனுடன் ஏலக்காய் சேர்த்து உட்கொள்வது, கொழுப்பு மற்றும் கலோரி எரியும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இந்த கலவை பசியை குறைப்பது மட்டுமல்லாமல் செரிமானத்தையும் மேம்படுத்த உதவும்
ஒரு ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடியை கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்
இஞ்சி மற்றும் ஏலக்காயின் கலவை, தொப்பையை குறைக்க சிறந்த வழியாக உள்ளது
உடல் எடை இழப்புக்கு, சத்தாண உணவுகள் மற்றும் அன்றாட உடற்பயிற்சி செய்ய வேண்டும்