ஊதுவத்தி, சாம்பிராணி உடல்நலனுக்கு தீங்கானதா?

Published by: ஜான்சி ராணி

ஊதுபத்தி ஆகியவற்றில் இருந்து வெளிவரும் அதிகமான புகை உடல்நலனுக்கு கேடு விளைவிக்கலாம்.

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அகர்பத்தி, வாசனை மெழுகுவத்தி, வீட்டை நறுமணமாக்கும் வாசனையூட்டி,

வாசனை திரவியம், கொசுவத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கழிவறை வாசனையூட்டி, நவீன காலத்தின் Plug -In - Diffuser என்று விதவிதமாக வாசனைப் பொருள்களைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

அதிகமாக புகை இருந்தால் இருமல் உள்ளிட்ட சுவாச கோளாறுகள் ஏற்படலாம்.

அதிகமாக ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால் அது உடல்நலனுக்கு கேடு.

நல்ல உடல்நலத்துடன் இருக்கும் மக்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் சாதாரண இருமல் மற்றும் தும்மலுடன் அவர்கள் கடந்து சென்றுவிடுவார்கள்.

அதே சமயம் ஏற்கெனவே ஆஸ்துமா, தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் இவற்றைப் பயன்படுத்தினால், நிலைமை சற்று மோசமாகி உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம்.

இது அபாயகரமான நோய்களை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயற்கையானவற்றை பயன்படுத்தலாம். இயற்கை சாம்பிராணியைப் பயன்படுத்தலாம். சாம்பிராணி வாங்கும்போது, அதன் தரத்தையும், முழுவதும் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டதா என்பதையும் கவனிப்பது முக்கியம்.