ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன



இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது



58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது



மும்பை, பஞ்சாப் அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன



மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன



ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 8 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது



சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகளுமே, நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளன



அதில் சென்னை அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது



குஜராத் அணி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது



பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இரண்டு அணிகளுக்குமே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமாகும்



நடப்பு தொடரில் ஏற்கனவே விளையாடிய போட்டியில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி, அதே உற்சாகத்தில் இன்று களமிறங்குகிறது



குஜராத் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது