பாகற்காயில் உள்ள கசப்பை எப்படி ஈஸியாக வெளியேற்றுவது? பாகற்காய், காய்கறி வகைகளில் ஒரு தனித்துவமான சுவையை கொண்டது பாகற்காய் கசப்பான சுவையை கொண்டு இருப்பதால் பெரும்பாலான மக்கள் இதை விரும்புவதில்லை பாகற்காயின் மேற்பரப்பை நீக்கிய பிறகு சமைக்கலாம் அதனுள் இருக்கும் பெரிய விதைகளை நீக்கி விடலாம் சமைப்பதற்கு 20-30 நிமிடங்கள் முன்பு உப்பு தேய்த்து ஊற வைத்து அலச வேண்டும் உப்பு தடவிய பிறகு பாகற்காயில் இருந்து சாற்றை பிழிந்து எடுத்து விடுங்கள் கசப்பான சாற்றை எடுப்பது கசப்பை பெருமளவு குறைக்கும் சமைப்பதற்கு முன்பு நீர்த்த மோரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கலாம் மோரில் உள்ள புளிப்பு சுவை அதன் கசப்பு தன்மையை போக்க உதவி செய்யும்