சர்வதேச மகளிர் தினம் - வரலாறும் முக்கியத்துவமும்!

Published by: ABP NADU

மகளிர் தினம் சமத்துவம், உரிமைகள், பெண்களின் சாதனை மற்றும் பாலின சமத்துவத்திற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறப்பு நாள்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெண்கள் வாக்குரிமை, வேலை, சம ஊதியம் கோரி உரிமைகளுக்காக ஒன்றிணைந்தனர்.

1911ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் பெண்கள் சம உரிமை கோரி பேரணி நடத்தினர். இது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

தொடர் போராட்டங்களுக்கு பிறகு 1975ல் ஐக்கிய நாடுகள் சபை மகளிர் தினத்தை அங்கீகரித்தது.

பெண்கள் அனைத்து துறைகளிலும் சம வாய்ப்புகளை பெற வேண்டும். பாலின பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஐநா இதை அறிவித்தது

அறிவியல், அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு என பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.

மகளிர் தினம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாகுபாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகின்றது .

பல துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர் அதுமட்டுமின்றி உயர்ந்த பதவிகளில் முதன்மையாக இருகின்றனர்

பெண்கள் முன்னேற பாலின வேறுபாடுயின்றி அனைவரும் பெண்களின் வலிமையான எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.