குங்குமப்பூவில் இத்தனை நன்மைகள் இருப்பதால்தான் காஸ்ட்லியாக இருக்கா?

Published by: விஜய் ராஜேந்திரன்

1. மனநிலையை மேம்படுத்துகிறது

குங்குமப்பூவில் மனநிலையை மேம்படுத்தும் பண்புகள் உள்ளது. இது செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைப் போக்க உதவும்

2. அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது

அல்சைமர் அபாயத்தைக் குறைக்க உதவலாம். குங்குமப்பூ அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை ஆதரிக்க உதவும்

3. அழற்சி எதிர்ப்பு

ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் உதவியுடன் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து இது நாள்பட்ட அழற்சி நிலைகளை நிர்வகிக்க உதவுகிறது

4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

இதய ஆரோக்கியத்தை காத்து, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது

5. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

குங்குமப்பூ செரிமான நொதிகளை தூண்டுவதன் மூலம் இரைப்பை, குடல் அசௌகரியத்தை நீக்குகிறது

6. எடையை நிர்வகிக்க உதவும்

குங்குமப்பூ பசியை குறைக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடையைக் குறைக்கலாம்

7. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

குங்குமப்பூ அதன் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் காரணமாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது

8. மாதவிடாய் வலியை நீக்குகிறது

மாதவிடாய் பிடிப்புகள், அசௌகரியத்தை போக்க உதவுகிறது

9. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகிறது