வெஸ்டர்ன் டாய்லெட் பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான விஷயம்!

Published by: விஜய் ராஜேந்திரன்

வீடுகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும், பொது கழிவறைகளில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட் அமைப்பிற்கும் வித்தியாசம் உள்ளது

எப்போதாவது பார்த்தது உண்டா? அதாவது, பொது கழிவறைகளில் உள்ள டாய்லெட் சீட்களில் சிறிய இடைவெளி ஒன்று இருக்கும். அதுவே வீடுகளில் உள்ள டாய்லெட் சீட்டுகளில் எந்த இடைவெளியும் இருக்காது

அதிகமான மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற சூழலில், அவர்களது பிறப்புறுப்பானது டாய்லெட் சீட் மீது உரசுவதை தவிர்க்க உள்ளது

இந்த இடைவெளி இருப்பதால் பெண்கள் எளிமையாக சுத்தம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்

டாய்லெட் சீட்டில் கை படாமல் தங்களுடைய அந்தரங்க பகுதி மற்றும் அதையொட்டிய பகுதிகளை சுத்தம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்

எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்ற நிலையில், பெரும்பாலான மக்கள் அதை பிரித்துப் பார்ப்பதில்லை

சிலர் பெரிய பட்டன் அழுத்துவதே சிறப்பானது என்ற நோக்கத்தில் எப்போதுமே அதை உபயோகம் செய்கின்றனர்

சிறுநீர் கழிக்கும் சமயத்தில் ஃப்ளஷ் அவுட் செய்ய குறைவான தண்ணீரும், மலம் கழிக்கும் சமயத்தில் அதிக தண்ணீரும் தேவைப்படும்

ஆக, குறைவான தண்ணீர் தேவைக்கு சிறிய பட்டனையும், அதிக தண்ணீர் தேவைக்கு பெரிய பட்டனையும் அழுத்தலாம்