பாலூட்டும் தாய்மார்களுக்கு பலன் தரும் உணவுகள்

Published by: ABP NADU

சோம்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல பருகலாம். இதனால் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கலாம்

தாய்ப்பால் நன்கு சுரக்கவும், பிரசவத்திற்கு பின் உடல் தேறவும் வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை உதவலாம்

வெள்ளைப்பூண்டு பால் சுரப்பை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் வைக்க உதவலாம்

பாதாம் பருப்பில் உள்ள லேக்டோஜெனிக் பண்புகள் தாய்ப்பாலை அதிகம் சுரக்க உதவுகிறது

பால் சுறா மீனில் உள்ள ஒமேகா 3 , புரோட்டீன் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவுகிறது

பாலூட்டும் பெண்கள் பசலைக்கீரையை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்

ஓட்ஸ் மற்றும் பார்லி போன்ற தானிய உணவுகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ளன

காரட் சாறை பாலூட்டும் பெண்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்