ஒருவரை காதலிக்க எந்த விஷயம் தேவைப்படுகிறது? வாழ்வை அழகாக்கும் விஷயங்களில் காதல் மிகவும் முக்கியமானது ஆகும் சரியான காதல் துணையை தேர்வு செய்து அவர்களுடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கினால் சிறப்பாக இருக்கும் அன்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆணவம் எட்டிப்பார்த்தால் அந்த உறவில் விரிசல் என்பது ஊஞ்சல் ஆடத் தொடங்கிவிடும் காதலர்களுக்கு இடையே, கணவன்/ மனைவிக்கு இடையே எப்போதும் யார் பெரியவர் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இங்கு பல உறவுகள் சேராமல் இருப்பதற்கு காரணம் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும், மன்னிக்காமல் இருப்பதும்தான் உங்கள் காதல் துணை தன்னால் நீங்கள் காயப்பட்டதை எண்ணி மனம் வருந்தினால், தன் தவறை சரி செய்து உங்களுடன் வாழ ஆசைப்பட்டால் அவருக்கு வாய்ப்பு அளியுங்கள் முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத பலரும், தங்களுக்கு கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பை இறுகப்பற்றிக் கொள்ள மிகவும் ஆசைப்படுவார்கள் பிரிந்து செல்வது எதற்கும் தீர்வாகாது உங்கள் காதல் துணை மோசமான நபராக இருந்தால் பிரிந்து செல்வது தவறல்ல பிரிந்து செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், சேர்ந்து வாழ்வதற்கு அன்பும், காதல் மட்டுமே பிரதானம் ஆகும் விட்டுக்கொடுத்துச் செல்வதாலும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பாலும் சண்டைகளையும், சங்கடங்களையும் எளிதில் கடந்து அன்பாக வாழலாம்