நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஜூஸ்!

Published by: ஜான்சி ராணி

என்னென்ன தேவை?. நெல்லிக்காய் - 5, தேன் - தேவையான அளவு, ஃப்ரெஷ் மஞ்சள் கிழங்கு - சிறிய துண்டு, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தண்ணீர் - சிறிதளவு

நெல்லிக்காயை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். மஞ்சள் கிழங்கு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி எடுக்கவும்

மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், மஞ்சள், ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்ததும் வடிகட்டவும்.

இதோடு தேவையான அளவு தேன் கலந்தால் ஜூஸ் தயார். 

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பெரிய டம்ளர் அளவில் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் நெல்லிக்காய்க்கு திறன் அதிகம்.

நெல்லிக்காயில் மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது

இது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக இயங்க செய்யவும் பாதுகாக்கவும் உதவுகிறது.