கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பார்டி ஐடியா?
வீட்டிலேயே நமக்கு பிடித்த வகையில் கொண்டாடலாம். குடும்பத்தினருடன் கோலகமாக கிறிஸ்துமஸ் ஈவ், கிறிஸ்துமஸ் கொண்டாட உங்களுக்காக சில ஐடியா இதோ.
கிறிஸ்துமஸ் ஈட், அலங்கரிக்கப்பட்ட வீட்டில் குடும்பத்தினருடன் பிடித்த திரைப்படங்களை காணலாம். ஃபீல் குட் கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன.
விடுமுறை தினம் என்றால் நாள் முழுக்க சிறந்த திரைப்படங்களை கண்டு மகிழலாம்.
விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் செலவிடலாம். கிறிஸ்துமஸ் நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து அலங்காரம் செய்யலாம். கிறிஸ்துமஸ் தீம்களுடன் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி, கேக், இனிப்புகள், குக்கீஸ் இல்லாமல் எப்படி? குழந்தைகளுடன் பேக்கிங் செய்யலாம். சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிஸ்கெட்கள் செய்து ருசித்து உண்ணலாம்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிவற்றை கொண்டாட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கலாம்.
விழா காலங்களில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வருகை தருவதை விட வேறென்ன கொண்டாட்டம் இருக்க முடியும். அவர்களை வீட்டிலேயே தங்கிடும் வைத்து பல்வேறு கொண்டாட்டங்களை திட்டமிட்டு செய்யலாம்.
டீ பார்ட்டி, அனைவரும் சேர்ந்து எதாவது சிறப்பான உணவுகளை சமைத்து உண்ணலாம்.