ஆடைகள் சீக்கிரமாக நிறம் மங்குகிறதா?பராமரிக்க சில டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி

சோப்பு

ஆடைகளை துவைக்கும்போது, உரிய அளவிலான தண்ணீர், சோப்பை பயன்படுத்த வேண்டும். அதிக சோப்பு பயன்படுத்த கூடாது.

அதிக வெப்பம் வேண்டாமே!

அதிக வெப்பத்தில் துவைக்கும்போதும், அதிகமாக சோப்பு போடும் போதும் ஆடைகள் மங்கக்கூடும். தண்ணீர் சூடாக இருக்க கூடாது.

வாஷிங் மெஷினில் துவைக்கும்போது...

வாஷிங் மெஷினில் துவைக்கும்போது அதிக நேரம் ஓடவிடாமல் ஸ்பின்னில் வைத்து துவைத்தால் சீக்கிரமாக துணியின் நிறம் மாறாது.

தனித்தனியே துவைக்க வேண்டும்

எப்போதுமே பழைய ஆடைகளுடன் புதிய ஆடைகளை சேர்த்து துவைக்க வேண்டாம். குழந்தைகளின் ஆடை களையும் ஒன்றாக போட்டு துவைக்கக் கூடாது.

ஊற வைக்கும்போது கவனிக்க..

துணிகளை துவைக்கும் முன்பு, அடர்த்தியான அழுக்கு அல்லது கறைகள் படிந்த இடத்தை முதலில் நன்கு அலசிவிட்டு அதன் பின்னர் ஊற வைத்து துவைக்க வேண்டும்.

நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது

ஆடைகளை துவைக்கும்போது, சோப்பு கலந்த நீரில் நீண்ட நேரம் ஊற வைக்கக்கூடாது. அத்துடன் மாசுபட்ட தண்ணீரில் துணிகளை அலசுவதை தவிர்க்க வேண்டும்.

கடும் வெயிலில் உலர்த்த வேண்டாம்

ஆடைகளை துவைக்கும்போது, சோப்பு கலந்த நீரில் நீண்ட நேரட தண்ணீரில் துணிகளை அலசுவதை தவிர்க்க வேண்டும். கடும் வெயிலில் உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். அதிக வெப்பம், ஆடைகளின் பொலிவைக் குறைக்கும், வண்ணத்தையும் பாதிக்கும்

பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றவும்

புதிய ஆடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ள பராமரிப்பு குறிப்புகளை நன்றாக படித்துப் பார்த்து அதையே பின்பற்றுங்கள். அதிலும் விலை அதிகமான ஆடைகளின் பராமரிப்பு குறிப்புகளை தெரிந்துகொள்வது அவசியம்.