உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் பலவிதமான டயட் முறைகளை முயற்சி செய்து வருகின்றனர்
டயட் எவ்வளவு முக்கியமோ அதே போல தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியம்
சிலர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு கப் பால் சேர்த்த காபி அல்லது டீ குடிப்பார்கள்
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ சத்து வைட்டமின் சி மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது
லெமன் காபியில் உடல் ஆற்றலை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்
முதலில் ஒரு கிளாசில் எலுமிச்சை சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் காபி பொடி மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்
இதனை நன்கு கலக்கி விட்டு குடித்தால் சுவையான ஆரோக்கியமானவர் லெமன் காபி தயார்,இனிப்பு சுவை தேவைப்பட்டால் அரை டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்