நமது உடலின் உறுப்புகள் சரியான முறையில் செயல்பட இரத்த ஓட்டம் மிகவும் அவசியமானதாக உள்ளது
இரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தி அந்தந்த உறுப்புகள் தாம் செய்ய வேண்டிய வேலைகளை சிறப்பாக செய்கின்றன
இரத்த ஓட்டம் இல்லாததே நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். உறுப்புகள் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததே ஆகும்
இரத்த ஓட்டம் தடைபடும்போது வலி, தசை பிடிப்பு, மரத்துப்போதல், செரிமானக் கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போகுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்
இரத்த நாளங்கள் சீராக இயங்க ஒமேகா-3 அமிலங்கள் மிகவும் அவசியம். அதனால் மீன் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்
நம் உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை சிட்ரஸ் பழங்கள் தரும்
நமது இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன
நமது இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவை இரண்டையும் பராமரிக்க பூண்டு உதவுகிறது
வெங்காயத்தில் காணப்படும் ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் இரத்த ஓட்டத்திற்கு நேரடியாக உதவுகின்றன