கூந்தலை அழகாக்க இருக்கவே இருக்கு சிகைக்காய் பொடி! சிகைக்காய் இயற்கை மூலிகையாகும். இது உங்கள் தலைமுடிக்கு அளவில்லா நன்மைகளை வழங்குகிறது சிகைக்காய் பொடி தலைமுடியை சுத்தம் செய்து பளபளப்பை சேர்ப்பதுடன் முடியை பலப்படுத்துகிறது சிகைக்காயை நன்றாக காயவைத்து தூளாக அரைத்து காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள் சிகைக்காய் பொடியின் நன்மைகளை அதிகரிக்க, அதை உங்களுக்கு பிடித்த தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து பயன்படுத்தலாம் உங்கள் தலைமுடியை வளர்க்கவும், சீரமைக்கவும், சிகைக்காய் பொடியை ஹேர் மாஸ்காக பயன்படுத்தவும் நெல்லிக்காய் வத்தல், சோப்பு கொட்டையுடன் சிகைக்காயை அரைத்து தலைமுடியை அலச பயன்படுத்தலாம் பின் குறிப்பு : சிகைக்காயை போட்டு தலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்னர், தலையில் லேசான சூடு கொண்ட நல்லெண்ணெயை தடவி மசாஜ் செய்து கொள்ளவும். இப்படி செய்தால் உடல் சூடு தணியும். நல்ல பலன் கிடைக்கும்