சினிமா ஹீரோயின் போல் முடி வேண்டுமா? இதை கட்டாயம் பின்பற்றி வாங்க!
Published by: பிரியதர்ஷினி
காலை உணவுக்கு முன் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும்
காலை 11 மணி அளவில் சாத்துக்குடி, மாதுளை, பீட்ரூட் ஆகியவற்றை ஜூஸாக குடிக்கவும். தினமும் ஏதாவது ஒன்று குடித்தால் போதுமானது
மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை சேர்க்கவும்
பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, சுரைக்காய், முருங்கைக் கீரை, பசலைக்கீரை, மட்டன் (அ) மீன் இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்
மதிய உணவுக்கு பின் ஒரு கிளாஸ் மோரில் சிறிது கறிவேப்பிலை பொடியை சேர்க்கவும்
மாலை நேரத்தில் கொஞ்சம் டார்க் சாக்லேட் சாப்பிடவும்
குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
இரவு முழுவதும் ஊறவைத்த 5 பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிடவும்
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதை முறையாக தொடர்ந்து செய்து வந்தால் முடியின் ஆரோக்கியம் மேம்படும்