கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 2

Published by: பிரியதர்ஷினி

தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்

சாம்பாரில் புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் புளிப்பு குறைந்துவிடும்

கொத்தமல்லி சட்னி செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்

வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது இஞ்சி பூண்டு அரைக்கும் போர்த்து பச்சை மிளகாய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து அரைத்து பிரியாணியில் சேர்த்தால் சுவையாக இருக்கும்

சப்பாத்தியை தோசை கல்லில் வேகவைக்கும் போது எண்ணெய் ஊற்றாமல் சப்பாத்தி பாதி வெந்த பிறகு எண்ணெய் ஊற்றினால் மிருதுவாக வரும்

சர்க்கரை பொங்கல் செய்யும் போது அரிசியில் நெய் சேர்ப்பதுடன் பசும் பால் சேர்த்தால் சுவையாக இருக்கும்

ரசம் வைக்கும் போது கறிவேப்பிலைக்கு பதில் முருங்கை இலை சேர்த்து இறக்கினால் சுவை அட்டகாசமாக இருக்கும்

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்