சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலிவ் எண்ணெய்!
வயதாகும் போது முகத்தில் சுருக்கங்களும் அதிகரிக்கும். அதை சரிசெய்ய சிறந்த வழி ஆலிவ் ஆயில்.
சமையலுக்கு சாதாரண எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.
ஆலிவ் எண்ணெயைஉதடுகளில் தடவினால் உதட்டில் வெடிப்பு ஏற்படாமல், மென்மையாக இருக்குமாம்.
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் அழுக்கு நீங்கி, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும்
குளிப்பதற்கு முன், உடலில் ஆலிவ் எண்ணெயுடன் சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெது வெதுப்பான தண்ணீரில் குளித்தால் வெயிலால் சருமத்தின் ஏற்படும் கருமை நீங்கும்.
உணவில் ஆலிவ் எண்ணெய் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
ஆலிவ் எண்ணெய் பல நன்மைகளை கொண்டது.