ஏர்பாட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவரா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது சகஜமாகி விட்டது.
நடைப்பயிற்சி, போக்குவரத்து நெரிசல், அலுவலக பயணங்கள், நெடுந்தூரம் பயணம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் மேலே குறிபிட்ட ஏதாவது ஒன்று இல்லாமல் பயணம் இருக்காது.
வாழ்க்கையின் ஓர் அங்கமாகவும் இயர்போன் மாறிவிட்டது. அதுவும் அதிக சத்தத்துடன் இயர்போன் உபயோகிப்பதால் காதுகேளாமைக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள், நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காதுகள் குறித்து தெரிவிக்கையில்,” காதுகளுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் சிறிய நரம்புகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும். வெளியே ஏதாவது ஒலி கேட்கும்போது அது இந்த நரம்புகள் வழியே மூளைக்கு சென்றடையும். ஒலி எழுதும்போது நரம்புகள் பெரிதாகி மூளைக்கு சமிஞ்னை அளிக்கும்.
”ஹெட்போன்/ ஏர்பாட்ஸ் காதிற்குள் காற்று புகுதலை தடுக்கும். ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதை நான் பரிந்துரைக்க மாட்டேன். அது செவித்திறன் தொடர்பான பிரச்னைகளுக்கு காரணமாகி விடும்.
உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பலவாறாக பக்க விளைவுகளை தரும்.
நரம்பு பாதிப்படைந்து அதில் கட்டிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த கட்டிகள் coustic neuroma அல்லது vestibular schwannoma என்று அழைக்கப்படும்
ஏர்பாட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை என்றால், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே உபயோகிக்கும் வகையில் பழக்கப்படுத்தி கொள்ளலாம் என்று பிரியா பரிந்துரைக்கிறார்..
அதிகமாக ஏர்பாட்ஸ் பயன்படுத்துவது, அதிக சத்தத்துடன் இசை கேட்பதை தவிர்க்க வேண்டும்.