பனி.. குளிரை சமாளிக்க உதவும் ஹெர்பல் டீ!
குளிர் காலம் முடிந்தும் பனிமூட்டமானது காலை பாடாய் படுத்தி வருகிறது. அந்த நேரத்தில் நம் உள்ளம் தேடுவதெல்லாம் இதமான ஒரு பானம்.
குளிர் காலத்தில் சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் சில பானங்களை நாம் பருக வேண்டும்.
துளசி தேநீர் என்பது உடலில் எதிர்ப்பு சக்தியை சேர்க்கும். இதில் கொஞ்சம் இஞ்சியும், தேனும் கலந்து சில துளிகள் எலுமிச்சை சேர்த்து அருந்தலாம்.
காஷ்மீர் மக்கள் பாரம்பரிய டீ.லவங்க பட்டை, ஏலக்காய், குங்குமப்பூ, ரோஜா இதழ் ஆகியன தேவை. தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் தட்டிப் போடவும். ரோஜா இதழ், க்ரீன் டீ தூள்..கொதிக்க வைத்து குடிக்கவும்.
லவங்கப்பட்டை டீ உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். மெக்னீசியம், இரும்பு, புரதம், தாமிரம் போன்ற சத்துக்கள் இதில் காணப்படுகிறது.
மிளகில் தேநீரா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இதன் நன்மைகள் அதிகமென்பதால் இதை நீங்கள் நிச்சயமாக ட்ரை பண்ண வேண்டும். மிளகை நுணுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து கொதிக்க விடவும்.
தலைவலி, சளி தொந்தரவு இருக்கும்போது இதனைப் பருகலாம். உடல் எடை குறைப்புக்கு உதவும்.
க்ரீன் டீ உடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். வைட்டமின் சி உடலுக்கு கிடைக்க இது சிறந்த சாய்ஸ்..
எலுமிச்சை சாறு உடன் தேன் சேர்த்து அருந்தலாம்.