பல காரணங்களால் கருப்பாக காணப்படும் உதட்டின் நிறத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகாக இருக்கும் ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும் காய்ச்சாத பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து குழைக்கவும் இதை கருப்பான உதட்டின் மீது தடவி பேக் போல் போடவும் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் உதட்டை கழுவி எடுக்கவும் சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும் அதனால் எலுமிச்சை சாறுடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும் இதை தடவி நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும்