காலை 6 மணி, மாலை 6 மணி என 60 நிமிடங்கள் நடப்பதும், 6 நிமிடங்கள் வார்ம் அப் பயிற்சி செய்வதும், 6 நிமிடங்கள் உடலை குளிர்வடைய செய்வதும்தான் இந்த விதிமுறையின் அடிப்படை. அதனை செய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
'வார்ம்-அப்' பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கை, கால்களை நீட்டியும், மடக்கியும் செய்யும் இந்த பயிற்சியும், மென்மையான உடல் இயக்கமும் தசைகள் மற்றும் மூட்டு பகுதிகளை தயார் செய்வதற்கு துணைபுரியும். மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்,உடல் வெப்பநிலையையும் கூட்டும்.
நடைப்பயிற்சியை செய்து முடித்ததும் உடலை ஆசுவாசப்படுத்துவதும் முக்கியமானது. இதுவும் வார்ம் அப் பயிற்சி போல்தான். ஆனால் கை, கால்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்க தேவையில்லை. அவைகளை மென்மையாக அங்கும்,இங்கும் அசைத்தும், நீட்டி மடக்கியும், குனிந்து நிமிர்ந்தும் உடலை ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.
தினமும் சராசரியாக 30 நிமிடங்கள் நடப்பது இதய நோய் அபாயத்தை 35 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளது. காலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன. புதிய காற்றை சுவாசிக்கவும், வளர் சிதை மாற்றத்தை தூண்டப்படுவதும் காலை நேரத்தில் நடக்கும்.
மாலை 6 மணிக்கு நடைப்பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்த உதவிடும். அன்றைய நாளின் வேலைப்பளுவின்போது ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது இரவில் நல்ல தூக்கம் கிடைக்க உதவும்.
ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவும். வாரத்தில் 5 முறையாவது குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
உங்கள் உடலின் எடைக்கு ஏற்ப நடைப்பயிற்சி செய்யும்போது வேகத்தை தேர்வு செய்யலாம். வேகத்திற்கு ஏற்றவாறு கைகளை வீசி நடக்க வேண்டும்.
நடைப்பயிற்சி செய்யும்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நடக்க வேண்டும்.