வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழமும் தர்பூசணிதான்.



தரமான நல்ல பழங்களாக வாங்குவது எப்படி என்று காணலாம்.



தர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருக்கும்.



அந்தப் பழம் நல்ல ஆரோக்கியமான பழமாகும்.



பழம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல்



சராசரியான எடை கொண்ட பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.



தர்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம்.



பழத்தின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறம் இருந்தால் அதில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம்.



தர்பூசணிப் பழத்தின் ஒரு துண்டை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு வைக்கலாம்.



தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது அதிக ரசாயனம் ஏற்றப்பட்ட பழமாக இருக்கலாம்.