வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பது நல்லதா?

Published by: ஜான்சி ராணி

செரிமான ஆரோக்கியம் மேம்படும்

வெண்டைக்காயை சிறிய துண்டுகளா நறுக்கி அதை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கட்டி தண்ணீரை குடிப்பது செரிமான திறனை மேம்படுத்தும். அதிக நார்ச்சத்து கொண்டது.

தலைமுடி வளர்ச்சி

நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடட்ன் உள்ளிட்ட தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஸ்கால்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த

வெண்டைக்காய் தண்ணீர் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இன்சுலின் சென்சிட்டிவிட்டை அதிகரிக்கும். நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.

உடல் எடையை குறைக்க உதவும்

இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

சரும பராமரிப்பு

வெண்டைக்காய் தண்ணீர் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து க்ளோயிங் ஸ்கின் கிடைக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நீரிழிவு நோய் பாதிப்பு, குறைந்த கலோரி சாப்பிட வேண்டும் என விரும்புபவர்கள், செரிமான பிரச்னை இருப்பவர்கள் சாப்பிடலாம்.