குழந்தைகளுடன் பெற்றோர்கள் இப்படி தான் இருக்க வேண்டும்!
பெற்றோர்கள் மற்றவர்கள் முன்பு திட்டாமல் இருப்பது, குழந்தைகளின் பிடிவாத குணத்தை குறைக்கும்
குழந்தைகள் செய்யும் சின்ன விஷயங்களை பெற்றோர்கள் பாராட்ட வேண்டும். இது அவர்களுக்கு அனைத்து வேலைகளிலும் ஊக்கமளிக்கும்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எந்த வேலை செய்தாலும், அதற்கு வழிகாட்டியாக இருப்பது அவசியம்.
பிள்ளைகள் ஒரு வேலை செய்து முடிக்கும் வரை, பெற்றோர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்களை அவசர படுத்துவது, வெறுப்பை உண்டாகும்
குழந்தைகள் தங்களுக்கு உதவி செய்தால், நன்றி சொல்லிப் பழகுங்கள். வயதில் சிறியவர்களாக இருந்தாலும், நன்றி கூறுவதன் மூலம் நல்ல மனநிலையை குழந்தைகள் அடைவார்கள்
பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு நல்ல ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நல்ல ஒழுக்கத்தை கடைப்பிப்பார்கள்
பெற்றோர்களின் எதிரொலியாக குழந்தைகள் இருப்பதால், அவர்கள் முன்பு நல்ல சொற்கள் பேசுவதும், நல்ல செயல்களை செய்வதும், குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக பெற்றோர்கள் அமைவார்கள்