சருமத்தை ஜொலி ஜொலிக்க வைக்கும் ரோஸ் ஜெல்! மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல பிரச்சனைகளை சந்திக்கிறோம் இதில் சருமம் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் சிலர் சந்தைகளில் கிடைக்கும் சரும பராமரிப்புப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள் இதில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம் இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் ரோஜா இதழ்களை மட்டும் எடுத்து ஒரு பிளெண்டரில் சேர்க்க வேண்டும் தண்ணீருக்குப் பதில் ரோஸ் வாட்டரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் வரும் வரை நன்கு கலக்க வேண்டும் ரோஸ் வாட்டரை கிண்ணத்தில் ஊற்றி, கற்றாழை ஜெல்லை கரண்டியால் சேர்க்க வேண்டும் இது ஜெல் போன்ற நிலைக்கு வந்த உடன், வைட்டமின் ஈ எண்ணெயை சேர்க்கலாம் இரவில் முகத்தைக் கழுவிய பிறகு சிறிது ஜெல்லை எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து காலையில் கழுவலாம்