பாரம்பரிய கேரள எண்ணெய் வீட்டிலே செய்யலாம்.. அருவி போல் முடி வளரும்!
Published by: பிரியதர்ஷினி
தேவையான பொருட்கள் : 1 கைப்பிடி கறிவேப்பிலை , 1 டீஸ்பூன் வெந்தயம் (4 மணி நேரம் ஊற வைத்தது) , 2 டீஸ்பூன் செம்பருத்தி தூள் , 10 - 15 சின்ன வெங்காயம், கற்றாழை ஜெல் , 500 மில்லி தேங்காய் எண்ணெய் , 10-12 கருப்பு மிளகு
செய்முறை : முதலில் வெந்தயத்தை 4 மணிநேரத்திற்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்
கறிவேப்பிலையைக் கழுவி, கற்றாழை ஜெல்லையும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்
கறிவேப்பிலை, வெந்தயம், செம்பருத்தி தூள், வெங்காயம் மற்றும் கற்றாழை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
சிறிது தண்ணீர் சேர்த்து, பொருட்களை நன்றாக பேஸ்டாக கலக்கவும், பின் அதை இரும்பு பாத்திரத்திற்கு மாற்றவும்
10-12 நிமிடங்கள் இதை கொதிக்கவிடவும். கருப்பு மிளகு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
உருக்கிய தேங்காய் எண்ணெயை ஊற்றி கலக்கவும். தீயை குறைத்து வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும்
ஆறியதும் வடிகட்டி கண்ணாடி குடுவையில் 2 மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.
பின்குறிப்பு : இந்த கலவையில் தண்ணீர் மொத்தமாக சுண்டுவதை உறுதி செய்யவும். இல்லையென்றால் எண்ணெயில் ஒருவிதமான வாடை வரும். அத்துடன் விரைவில் கெட்டுவிடும்